ஒரு பிறந்த நாள் பரிசு

https://ma.tt/2024/01/birthday-gift/ – வர்ட்பிரஸ் தளத்தின் தல, Matt Mullenweg, தான் விரும்பும் பிறந்த நாள் பரிசு, ஒரு பதிவாக இருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறார். அது ஒற்றை வரியாக இருக்கலாம், புகைப்படமாக இருக்கலாம், அல்லது வீடியோவாக இருக்கலாம். ஏதோ ஒன்று. ஆனால் பதிவு.

நானெல்லாம் இன்று இணையத்தில் எழுதுகிறேன் என்றால் அதற்கு வர்ட்பிரஸ் ஒரு முக்கிய காரணம். நான் சம்பந்தப்பட்டிருந்த பதாகை இணைய இதழ் வர்ட்பிரஸ் தளமில்லாமல் சாத்தியப்பட்டிருக்காது. இதோ இப்போது எழுதிக் கொண்டிருக்கும் இந்த பிளாக் வர்ட்பிரஸ் Activitypub மூலமாக தன்னை Fediverseல் இணைத்துக் கொண்டதைத் கொண்டாடும் விதமாகவே. பெடிவர்ஸின் முதல் சில தமிழ் பிளாக்குகளில்இதுவும் ஒன்றாக இருக்கும். அந்த பெருமை மாட்டின் தலைமையையே சாரும்.

அவர் இன்னும் பல பத்தாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன். அது இணையத்துக்கு வளம் சேர்ப்பதாகவும் நம்மைப் போன்ற சாதாரணர்களின் குரல் ஒலிக்க இடமளித்து நமக்கும் ஆற்றல் அளிப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


பின்னூட்டமொன்றை இடுக

Design a site like this with WordPress.com
தொடங்கவும்